அமீரகத்தில் இண்டெர்நெட் வாயிலாக இலவச கால் சேவையை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. போடிம், மைக்ரோசாஃப், ஜூம் உள்ளிட்ட செயலிகளை தவிர்த்து வாட்ஸ் அப் செயலியை கொண்டு இண்டெர்நெட் கால் செய்ய முடியாது. இந்த நிலையில் சோதனை முயற்சியாக வாட்ஸ் அப் கால் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதால் நேற்று முதல் பயனர்கள் வாட்ஸ் அப் மூலம் கால் செய்யும் வசதியை பெற்றனர். வாட்ஸ் அப் கால் வசதி மிகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் இருந்ததாக பயனர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அன்றாட வாழ்வியலின் அங்கமாக மாறிவிட்ட வாட்ஸ் அப் மூலம் சொந்த நாட்டினருக்கு கால் செய்து நலம் விசாரித்துக் கொள்வது எளிதாக மாறிவிடும். வாட்ஸ் அப் கால் வசதி சோதனை முயற்சியாகவே மேற்கொள்ளப்பட்டது என்றும் இது வெகு நாட்கள் தடையின்றி செயல்படும் என உறுதியாக கூற முடியாது என அமீரக அரசின் சைபர் செக்யூரிட்டு தலைவர் முகமது அல் குவைதி தெரிவித்துள்ளார். வாட்ஸ் அப் மூலமாக கால் செய்யும் வசதி உலக நாடுகளில் செயல்பாட்டில் இருப்பதை போல அமீரக அரசும் அனுமதிக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
