UAE Tamil Web

“எங்களைக் கடத்திக்கொண்டு போறாங்க… ஹெல்ப் பண்ணுங்க சார்” – அமீரக காவல்துறைக்கு வந்த வாட்சாப் மெசேஜ்..!

Whatsapp

ராஸ் அல் கைமா காவல்துறைக்கு அன்றைய தினம் வாட்சாப் மெசேஜ் ஒன்று வந்திருக்கிறது. பொதுமக்களின் புகாருக்காக வழங்கப்பட்ட அந்த எண்ணிற்கு வந்த மெசேஜில், தாங்கள் ஆபத்திலிப்பதாகவும் எங்களைக் கடத்திக்கொண்டு செல்வதாவும் எங்களைக் காப்பாற்றுங்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து மெசேஜ் வந்த எண்ணை டிராக் செய்து, தேடுதல் வேட்டையைத் துவங்கியது போலீஸ். வலுக்கட்டாயமாக இரு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த ஒரு குழு முயற்சித்திருப்பது அப்போதுதான் தெரியவந்திருக்கிறது. மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் கொண்ட இந்தக் கும்பல் மசாஜ் செய்வதற்கு ஆட்களைத் தேர்வு செய்வதாககூறி இரு பெண்களையும் நேர்காணலுக்கு அழைத்திருக்கின்றனர்.

ஆனால், விபச்சாரத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தும் அவர்களது எண்ணம் இரு பெண்களுக்கும் தெரியவந்ததும் பயத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர் இருவரும். அந்தக் கும்பலில் இருந்த பெண், பாதிக்கப்பட்ட இருவரையும் தங்குமிடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது தான், வாட்சாப் மூலமாக காவல்துறையிடம் உதவி கேட்டிருக்கிறார்கள் இந்தப் பெண்கள்.

அதிரடியாக செயல்பட்ட காவல்துறை இந்தக் குழுவை கைது செய்திருக்கிறது. இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இக்குற்றவாளிகளுக்கு 5 வருட சிறைத்தண்டனையும், தண்டனை முடிவடைந்தவுடன் இவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், சட்ட ரீதியிலான கட்டணங்களை செலுத்துமாறும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் காவல்துறை கைது செய்த குழுவில் இடம்பெற்றிருந்த நபர் ஒருவர் நிரபராதி என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இணையவழி அரசு ஆணையம் (eGovernment Authority) சமர்ப்பித்த அறிக்கையின்படி, இவருடைய செல்போன் செயல்பாட்டை வைத்து, இவருக்கும் இக்குழுவிற்கும் சம்பந்தமில்லை எனத் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டார்.

Whatsapp
0 Shares
Share via
Copy link