UAE Tamil Web

எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி – அமீரகத்தில் இன்று துவங்கும் வைட் ஃப்ரைடே சேல்..!

AMAZON

அமீரகத்தில் இன்று வைட் ஃப்ரைடே (White Friday) சேல் துவங்குகிறது. இதனை முன்னிட்டு இணைய வழி வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் பல்வேறு வகையிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளன.

நவம்பர் 22 – 29 வரையிலான நாட்களுக்கு நடைபெறும் இந்தத் தள்ளுபடித் திருவிழாவில் எலெக்ட்ரானிக்ஸ், ஸ்போர்ட்ஸ், ஃபேஷன், அலங்காரப் பொருட்கள், சமையலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி அளிக்க இருப்பதாக அமேசான் (Amazon.ae) நிறுவனம் அறிவித்துள்ளது.

சாம்சங், சோனி, ப்ளாக் + டெக்கர், சிக்கோ, கெஸ், சேனல் ஆகிய முன்னணி பிராண்டுகளுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும் எனவும் பஹ்ரைன் மற்றும் ஓமானில் வசிப்பவர்களுக்கும் இந்த தள்ளுபடி அளிக்கப்பட்டிருப்பதாகவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல, அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராஜ்யத்தில் அமேசான் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டுவரும் தள்ளுபடி விலையில் பொருட்களையும் அமீரக வாசிகள் வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் இணையதளத்தில் குளோபல் ஸ்டோர் பக்கத்திற்குச் சென்றோ அல்லது அமேசான் அப்ளிகேஷனில் இண்டர்நேஷனல் ஷாப்பிங் என்பதைத் தேர்வு செய்தோ மக்கள் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கலாம்.

எந்த விலையில் பொருட்களை வாங்கியிருந்தாலும் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு அதே நாளில் இலவச டெலிவரி சேவையைப் பெறும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் நூன் (noon.com) நிறுவனம் யெல்லோ ஃப்ரைடே (Yellow Friday) சேல், இன்றுமுதல் துவங்குவதாக அறிவித்துள்ளது. நவம்பர் 22 – 28 வரையிலும் நடைபெறும் இந்த சேலில் 1 திர்ஹம்ஸ் முதல் மக்கள் பொருட்களை வாங்கலாம் எனவும் பல முக்கிய பிராண்ட்களின் பொருட்களுக்கு 80 சதவீத தள்ளுபடி அளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீட்டு அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் டான்யூப் ஹோம் நிறுவனம் மேட் ரெட் என்னும் ஆஃபரை அறிவித்துள்ளது. 1 திர்ஹம்ஸ் முதல் பொருட்கள் விற்கப்படும் எனவும் வாங்கும் பொருட்களுக்கு 90% வரையில் தள்ளுபடியானது அளிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமீரகம் மட்டுமல்லாது வளைகுடா நாடுகளில் உள்ளவர்களும் இந்த தள்ளுபடியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஃப்ரோமோஷன் நாட்களில் நாள்தோறும் 2,500 திர்ஹம்ஸ் வரையில் வெல்லும் வாய்ப்பும் மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. மொத்தம் 8000 விதமான வீட்டு அலங்காரப் பொருட்களுடன் இந்த மாபெரும் விற்பனைத் திருவிழாவில் களமிறங்கும் இந்நிறுவனம் நவம்பர் 30 ஆம் தேதிவரையில் இந்த தள்ளுபடி அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

வைட் வெனஸ்டே எனும் சேலைத் துவங்கியுள்ள ஹோம் பாக்ஸ் நிறுவனம் தங்களுடைய பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. கடந்த நவம்பர் 17 ஆம் தேதி துவங்கிய செண்டர்பாய்ன்ட்  நிறுவனத்தின் வைட் வெனஸ்டே என்னும் ஆஃபர் சேல் டிசம்பர் 4 ஆம் தேதிவரையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap