UAE Tamil Web

அமீரகத்தில் வரவிருக்கும் 4 நாள் தொடர் விடுமுறை – மக்கள் மகிழ்ச்சி..!

uae_public_holidays_resources1_

அமீரகத்தைப் பொறுத்தவரையில் இந்த வருடம் நீண்ட விடுமுறை தினங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. அதற்க்குக் காரணம் முக்கிய பண்டிகைகள் மற்றும் விடுமுறை தினங்கள் வார இறுதியில் வருகின்றன. ஆகவே மக்களுக்கு நீண்ட வார இறுதி விடுமுறை கிடைக்க இருக்கிறது. எப்படி எனப் பார்ப்போம்.

அராஃபத் தினம் மற்றும் ஈத் அல் அத்ஹா

அமீரக அரசு இணையத்தளத்தின்படி அராஃபத் தினம் மற்றும் ஈத் அல் அத்ஹா பண்டிகைக்கான விடுமுறை ஜூலை 19 திங்கட்கிழமை முதல் ஜூலை 22 ஆம் தேதி வியாழக்கிழமை வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்களுக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

ஹிஜ்ரி புத்தாண்டு

முகமது நபி (ஸல்) மெக்காவில் இருந்து மதீனாவிற்கு சென்றதை நினைவுகூரும் நாளாக ஹிஜ்ரி புத்தாண்டு பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட்  12 ஆம் தேதி வியாழக்கிழமை இந்த விடுமுறை வரவிருக்கிறது. ஆகவே அந்த வாரமும் கூடுதலாக மக்களுக்கு விடுமுறை கிடைக்கும்.

முகமது நபி (ஸல்) பிறந்தநாள்

முகமது நபி (ஸல்) அவர்களுடைய பிறந்தநாள் அக்டோபர் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு வழக்கமாக ஒருநாள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இம்முறை அக்டோபர் 21 ஆம் தேதி வியாழக்கிழமை என்பதால் அமீரக மக்கள் கூடுதல் விடுமுறை தினங்களை அனுபவிப்பார்கள்.

தியாகிகள் தினம்

அமீரகத்தினைக் காக்கும்பொருட்டு தங்களது இன்னுயிரையும் தியாகம் செய்த மகத்தான வீரர்களின் நினைவைக் கொண்டாடும் இந்நாள் டிசம்பர் 1 ஆம் தேதி புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

அமீரக தேசிய தினம்

தியாகிகள் தினத்தைத் தொடர்ந்து டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் அமீரக தேசிய தினம் கொண்டாடப்பட இருக்கிறது. ஆகவே அப்போதும் மக்களுக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் பலரும் உற்சாகமாக இருக்கின்றனர்.

uae_public_holidays_resources1_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap