UAE Tamil Web

ஆப்கன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அமீரகம் – பாராட்டிய அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் அதனை விரும்பாத மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டினர்களை மீட்க அந்தந்த நாடுகள் முனைப்பு காட்டிய நிலையில் அனைவரையும் பத்திரமாக மீட்க அமீரகம் முன் வந்தது. இதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் நன்றி தெரிவித்திருந்தன. இந்த நிலையில் ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்களில் 5,000 பேர் வரை அமீரகத்தில் வந்திறங்கி Transit விமானங்களில் செல்வதற்கு அமீரக வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆப்கானிஸ்தானில் இருந்து போர் விமானங்கள் மூலம் மீட்கப்படும் மக்கள் அமீரகத்தில் பத்திரமாக இறக்கிவிடப்படுவர். பின்னர் இங்கிருந்து வேறு விமானங்கள் மூலம் நாடு திரும்புவர். மீட்பு நடவடிக்கையில் துரிதமாக உதவிக்கு வந்த அமீரக அரசுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

1 Share
Share via
Copy link