உலக நாடுகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட COP28 மாநாட்டிற்கான ஏலத்தில் அமீரகம் வென்றிருக்கிறது. இந்த COP28 மாநாடு குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக்கவும்.
அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,” COP28 மாநாட்டினை நடத்த அமீரகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்காக நாங்கள் அமீரகத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். மாநாடு சிறப்பான முறையில் நடைபெற தேவையான அனைத்து முயற்சிகளும் துரிதமாக மேற்கொள்ளப்படும். புவியைக் காக்கும் நடவடிக்கைகளில் அமீரகம் என்றென்றும் முன்னணி வகிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
نبارك لدولة الإمارات فوزها باستضافة أهم مؤتمر عالمي للمناخ COP28 في عام 2023 .. اختيار مستحق لدولتنا .. وسنضع كل إمكانياتنا لإنجاح المؤتمر .. وستبقى دولة الإمارات ملتزمة تجاه العمل المناخي العالمي لحماية كوكب الأرض.
— HH Sheikh Mohammed (@HHShkMohd) November 11, 2021
அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில்,” COP28 மாநாட்டினை நடத்த அமீரகம் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயங்களில் உலக நாடுகளுடன் அமீரகம் ஒருங்கிணைந்து பயணிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
يسعدنا استضافة دولة الإمارات مؤتمر المناخ ” COP28 ” في عام 2023 .. تنسيق الجهود في العمل المناخي بين دول العالم، فرصة لتعزيز حماية البيئة وتحقيق النمو الاقتصادي المستدام، ونرحب بالتعاون مع المجتمع الدولي لضمان ازدهار البشرية.
— محمد بن زايد (@MohamedBinZayed) November 11, 2021