UAE Tamil Web

2வது திருமணம் செய்து கொள்ள நினைத்த கணவனின் கை விரல்களை உடைத்த மனைவி!

hand break

2வது திருமணம் செய்து கொள்ள நினைத்த கணவனின் கைவிரல்களை உடைத்த மனைவிக்கு துபாய் குற்றவியில் நீதிமன்றம், ஆறு மாத சிறைத்தண்டனையுடன், அவரை நாடுகடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

விசாரணையில், 25 வயதான ஆசிய பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. அப்போது மனைவியை கணவன் கன்னத்தில் அறைந்ததில், 2 சதவீதம் கேளாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த கணவர், தனக்கு திருமண உரிமைகளை வழங்க மறுத்ததாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

மறுமணம் செய்து கொள்ளும் முடிவை மனைவி ஏற்காததால், அவரைத் தாக்கி அவமானப்படுத்தியதாக 24 வயது கணவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குவாதத்தின் போது, மனைவி கணவனின் வலது கையில் உள்ள விரல்களை பிடித்து தள்ளியுள்ளார். இதனால் கணவனின் கை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

hand break
3 Shares
Share via
Copy link