UAE Tamil Web

ஷார்ஜா: குடும்பத்தில் சண்டை; 4 வது மாடியில் இருந்து குதித்த இந்தியப் பெண் மரணம் – கொலையா? தற்கொலையா என காவல்துறை விசாரணை..!

fall-girl-

வியாழக்கிழமை இரவு 9.15 மணிக்கு ஷார்ஜாவின் அல் தவூன் பகுதியில் உள்ள குடியிருப்பு டவரில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கீழே குதித்ததாக ஷார்ஜா காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இதனையடுத்து மீட்புப்படை, தேசிய ஆம்புலன்ஸ், மருத்துவர் குழு, தடயவியல் நிபுணர்கள் குழு ஆகியவை சம்ப இடத்திற்கு விரைந்து சென்றிருக்கின்றன. கட்டிடத்தின் 4 வது மாடியில் இருந்து கீழே குதித்ததால் பெண்ணின் தலைப்பகுதி கடுமையாக சேதமடைந்திருக்கிறது. குறிப்பாக அவரது கபாலம் சிதறியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கட்ட விசாரணைகளுக்காக பெண்ணின் உடல் தடயவியல் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக பெண் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இருப்பினும் பெண்ணின் உறவினர்கள், அருகில் உள்ளவர்கள் இந்த சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் அனைவருக்கும் புஹைரா காவல் நிலையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இறந்த பெண்ணின் உடலை உறவினர்களிடம் அளிப்பதற்கான சட்ட ரீதியிலான பணிகள் அனைத்தும் முடிந்திருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

fall-girl-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap