UAE Tamil Web

“உன்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது… என் பொண்டாட்டி திட்டுறா” – 60 வயது தாத்தாவின் அட்டூழியம் – ஷார்ஜா நீதிமன்றத்தில் பரபரப்பு..!

court

திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது மாட்டேன் எனச் சொல்கிறார் என்கிறார் அமீரகத்தைச் சேர்ந்த 35 வயதான அந்தப் பெண்மணி. என் மனைவி திட்டுறா.. என்னால திருமணம் எல்லாம் செஞ்சுக்க முடியாது என்கிறார் அந்தத் தாத்தா.

நீங்கள் படித்ததது சரிதான். அவருக்கு 60 வயதாகிறது. வளைகுடா நாடு ஒன்றில் வசித்துவரும் அவர் மேட்ரிமோனி இணையதளத்தில் அக்கவுண்ட் ஒன்றைத் துவங்கி தனக்கு வரன் தேடியிருக்கிறார். இதேபோல் மேட்ரிமோனியில் பதிவு செய்திருந்த 35 வயதான அமீரகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தாத்தாவின் (மன்னிக்கவும்) மணமகனின் கணக்கைப் பார்த்து ஹாய் சொல்லப்போக இருவருக்கும் பிடித்துப்போனது.

திருமணம் செய்துகொள்ள ரெடி.. ஆனால் என் பொண்டாட்டிக்கு தெரியக்கூடாது. உங்க வீட்டினர் முன்பே செய்துகொள்ளலாம் என “மணமகன்” தெரிவிக்க, காதல் வயப்பட்ட பெண்ணும் தலையாட்டியிருக்கிறார். சங்கீத ஸ்வரங்கள் பாட்டுக் கணக்காக இரவு முழுவதும் காதல் ஜோடியின் காதல் போனில் பொங்கி வழிந்திருக்கிறது. இப்படி நாட்கள் சென்றிருக்கின்றன.

ஒரு மங்கள நாளில் பெண் வீட்டாரைப் பார்க்க மணமகன் அமீரகத்திற்கே வந்திருக்கிறார். இரண்டு மாதம் விசிட்டிங் விசாவில் அமீரகத்தில் தங்கியிருந்துவிட்டு சென்றவர் சொந்த ஊர் போனதும், கல்யாணம்லாம் வேண்டாம். என் பொண்டாட்டி திட்டுவா என ஜகா வாங்கியிருக்கிறார்.

அப்படியா சேதி? நாம் இரவு முழுக்க பேசிய ஆடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என கதிகலக்கியிருக்கிறார் பெண். பயத்தில் வேர்த்துக்கொட்டிய தாத்தாவிற்கு (அதுதான் கல்யாணம் நடக்கலையே.. அப்புறம் என்ன மணமகன்?) என்ன செய்வதென்று தெரியாமல் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

தன்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வேலை வாங்கித்தருவதாக தாத்தா நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.

விசாரணைக்கு அழைக்கப்பட்ட பெண், தன்பக்க நியாயங்களை எடுத்து வைத்திருக்கிறார். இந்தப் பிரச்சினையினால் அந்தப் பெண் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவரது வீடு மற்றும் நண்பர்களிடையே அவருக்கு இருந்த நற்பெயரும் கலங்கப்பட்டதாக தாத்தா ஒப்புக்கொண்டிருக்கிறார். இருந்தாலும் தாத்தாவுக்கு தைரியம்தான்..

இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பு வெளியான பிறகு தாத்தா என்ன ஆனார்? கேஸ் என்ன ஆனது என்பது குறித்து சிறப்புக் கட்டுரை ஒன்று எழுதப்படும்.

court
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap