UAE Tamil Web

“சந்தேகம்.. சந்தேகம்..” கணவனின் போனை வேவுபார்த்த மனைவிக்கு வேட்டுவைத்த நீதிமன்றம்..!

fone

கணவரின் போனை உளவு பார்த்த மனைவிக்கு தனிமனித சுதந்திரத்தை (privacy) மீறிய காரணத்திற்காக ராஸ் அல் கைமா சிவில் நீதிமன்றம் 5,431 திர்ஹம்ஸ் அபராதம் விதித்துள்ளது.

இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதற்கு காரணம் இருக்கிறது. கணவரின் போனை ரகசியமாக எடுத்த மனைவி அதிலிருந்த படங்கள், ரெக்காட்ஸ் மற்றும் கணவரின் தனிப்பட்ட தகவல்களை பிறருக்கு அனுப்பி கணவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போதே “வழக்கு நடைபெறுவதால் என்னால் சரிவர அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் நான் வேலை செய்யும் நிறுவனம் எனக்கு சம்பளம் தரவில்லை. அதேசமயம் எனது வழக்கறிஞருக்கும் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. மேலும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்கு மனைவி இழப்பீடு தர வேண்டும்” என்று கணவர் மற்றொரு வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து அவரது மனைவியின் வழக்கறிஞர் கூறும்போது, மனைவியை கணவர் கொடிய வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். திருமணமாகி ஒன்றாக வாழ்ந்த வீட்டிலிருந்து விரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி பெற்ற மகளையும் ஆதரவின்றி விட்டுச் சென்றுள்ளார் என்று அவரது மனைவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற விசாரணையில் மனைவி அவளது கணவரின் போனை எடுத்து உளவு பார்த்து அவருடைய தனிப்பட்ட தகவல்கள், படங்கள், முக்கிய ரெக்கார்டுகள் போன்றவற்றை பிறருக்கு அனுப்பியது ஆதாரப்பூர்வமாக நிறுபணமானது. இதையடுத்து கணவர் இழப்பீடு பெற தகுதியானவர் என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

இருப்பினும் இவ்வழக்கை நடத்தியதால் சரிவர அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை என்பதை ஏற்க மறுத்த ராஸ் அல் கைமா சிவில் நீதிமன்றம், ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றத்திற்கு செலவழித்த தொகைக்கு ஈடாக 5,431 திர்ஹம்ஸ் பணத்தை மனைவி கணவருக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

fone
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap