UAE Tamil Web

நடுத்தெரு என்றுகூடப் பாராமல் பெண் செய்த காரியம் – 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்த நீதிமன்றம்…!

dubai-court

டிராபிக் சிக்னலில் தனது குடும்பத்தார் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் ஒருவர் மீது ஏமிராட்டி ஆண் அளித்திருத்த புகாரில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காரில் தனது குடும்பத்தாருடன் பாதிக்கப்பட்ட நபர் சிக்னலில் நின்றிருக்கிறார். சிக்னலில் பச்சை விளக்கு எரிந்த பின்னரும் தனது காருக்கு முன்னால் நின்ற வாகனம் நகரவில்லை.

இதனையடுத்து,” வண்டியை எடுங்கள்” என பாதிக்கப்பட்டவர் தெரிவித்திருக்கிறார். முன்னால் நின்ற காருக்குள் இருந்த பெண்மணி, காரில் இருந்து இறங்கி திட்டத் துவங்கியிருக்கிறார். ஒருகட்டத்தில் வார்த்தைகள் எல்லை மீறியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட ஆணை பிடித்து தள்ளியிருக்கிறார் அந்தப் பெண்.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஏமிராட்டி ஆண், இதற்காக உளவியல் நிபுணரிடம் சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார். இதனையடுத்து நீதிமன்றத்தின் உதவியை நாடினார் பாதிக்கப்பட்டவர். தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நஷ்ட ஈடாக 150,000 திர்ஹம்ஸ் இழப்பீடு பெற்றுத்தரும்படியும் முழு தொகை அளிக்கப்படும் வரை 12 சதவீத வட்டி அளிக்கப்படவேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் சட்ட கட்டணங்களையும் அவரே ஏற்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண்ணை குற்றவாளியாக அறிவித்தது. மேலும் பெண்ணை 50,000 திர்ஹம்ஸ் தொகையை இழப்பீடாக வழங்குபடி உத்தரவிட்டிருக்கிறது. மேலும், கட்டணங்கள் மற்றும் அவருடைய சட்ட செலவுகளையும் பெண்மணி ஏற்கவேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

dubai-court
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap