UAE Tamil Web

போலிஸ் அதிகாரிகள் முன் ஆடையின்றி ஓடிய இளம்பெண் – விளாசிய நீதிமன்றம்..!

lock

ஒரு பெண்ணுக்கு ராஸ் அல் கைமா குற்றவியல் நீதிமன்றம் சிஐடி அதிகாரிகளை அவமதித்தது, தாக்கியது, அச்சுறுத்தியது, விசாரணை நடத்த விடாமல் தடுப்பதற்காக நிர்வாணமாக நின்றது போன்ற குற்றங்களுக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 500,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ராஸ் அல் கைமாவிலுள்ள மமுரா காவல் நிலையத்தில் இரண்டு பெண்கள் தங்கள் பிளாட்களில் குடியிருக்கும் இரண்டு இளம்பெண்கள் தங்களை தாக்கியதாகவும், உடமைகளைக் கொள்ளையடித்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக இந்த புகார் குறித்து விசாரிக்க இரண்டு ஆண் காவலர்கள் அந்த பிளாட்டிற்கு சென்றுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பெண்களில் முதல் பெண் இரண்டு காவலர்களையும் இடைமறித்து அவர்களை தள்ளிவிட்டதோடு, காவலர் ஒருவரின் தொப்பியை பிடுங்கி அவரை அவதூறான சொற்களால் திட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் காவலர்கள் முன்னிலையில் அந்த பெண் தன்னுடைய ஆடையை கழற்றி காவலர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறி அலறியுள்ளார். அதேசமயம் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது பெண்ணோ காவலர்களை மிரட்டியதோடு தனது கையை காயப்படுத்தி விட்டதாகவும் கூச்சலிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த ராஸ் அல் கைமா பொது வழக்கு நீதிமன்றம் இந்த வழக்கை ராஸ் அல் கைமா குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றியது. அங்கு குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது பெண்ணிற்காக ஆஜரான வழக்கறிஞர் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் அவருடைய கட்சிக்காரரை விடுவிக்குமாறும், தன் கட்சிக்காரர் எந்த தவறும் செய்யவில்லை என்றும் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.

இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது பெண் கூறுகையில், “என்னுடன் இருந்த பெண் தான் காவலரை தாக்கி அவர்களை அவமதித்து அவளது ஆடையை கழற்றினாள். நான் காவல்துறையினரை எதிர்க்கவில்லை. எவ்வித பிரச்சனையும் செய்யாமல் என்னுடைய சொந்த விருப்பத்துடன் காவல்துறையினரின் காரில் ஏறி சென்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காவலரை அந்த பெண் தாக்கும் போது கூட எனது கட்சிக்காரர் தான் தடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது பெண்ணிற்கு ஆதரவாக களமிறங்கிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பெடரல் ஆர்டிகல் சட்டம் 88 மற்றும் 176 பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முதல் பெண் ஏற்கனவே பல குற்ற செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும் மூன்றாவதாக பெடரல் ஆர்டிகல் சட்டம் 358 ஆவது பிரிவின் கீழ் காவலர்களை அச்சுறுத்திய காரணத்திற்காக அந்த பெண்ணிற்கு தண்டனையும் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேநேரம் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது பெண் குற்றவாளி இல்லை என்பது தெரியவந்ததையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ராஸ் அல் கைமா குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட முதல் பெண்ணிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் திர்ஹம்ஸ் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதோடு மட்டுமின்றி காவலர்களை அவமதித்த குற்றத்திற்காக மேலும் ஆறு மாத காலம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது பெண் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிளாட்டிலிருந்த இந்த இரண்டு பெண்களும் கொள்ளையடித்ததாக இரண்டு பெண்களால் காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

lock
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap