UAE Tamil Web

நடுத்தெரு என்றும் பார்க்காமல் இளம்பெண்ணை பளார் பளார் என்று அறைந்த பெண் – அபராத ஆப்படித்த நீதிமன்றம்..!

abudhabi court

அபுதாபியில் பொது இடம் என்றும் பார்க்காமல் இளம்பெண் ஒருவரை கணத்தில் பளார் பளார் என்று அறைந்தது மட்டுமல்லாமல் அவருடைய தோள்பட்டை, கழுத்து ஆகியவற்றிலும் “கைவரிசையை” காட்டியிருக்கிறார் ஒரு பெண்.

அடிவாங்கிய பெண் 20 நாட்களாக வேலைக்குத் திரும்ப முடியாமல் அவதியுற்று, மன ரீதியிலான சிக்கல்களையும் எதிர்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அபுதாபி சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடாக 15,000 திர்ஹம்ஸ் தொகையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக அபுதாபி கீழமை நீதிமன்றம் குற்றவாளிக்கு 10,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்திருந்தது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு 2 லட்சம் திர்ஹம்ஸ் இழப்பீடாக வழங்க உத்தரவிடக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அபுதாபி சிவில் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்குத் தொடுத்ததில் அவருக்கு 15,000 த்ரிஹசம் இழப்பீடு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

abudhabi court
0 Shares
Share via
Copy link