UAE Tamil Web

அட்ராசக்கை : பெண்கள் ஓட்டிவரும் காருக்கு இலவச வாஷ் மற்றும் ஆய்வுகள் – அமீரக நிறுவனம் வெளியிட்ட ஆஃபர்..!

AUTOXPRESS

ஷார்ஜா ரிங் ரோட்டில் அல் அஸ்ரா பகுதியில் அமைந்துள்ளது ரஃபித் ஆட்டோமோட்டிவ் சொலுயூஷன் (Rafid Automotive Solutions). இங்கு ஆகஸ்டு 28 ஆம் தேதிமுதல் 31 ஆம் தேதிவரையில் பெண்களுக்கு இலவச கார் வாஷ் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமிராட்டி மற்றும் வெளிநாட்டினரைச் சேர்ந்த பெண்களுக்கும் இந்த ஆஃபர் பொருந்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு 28 ஆம் தேதி அமீரக மகளிர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.

இதனை சிறப்பிக்கவே இந்த முடிவினை ரஃபித் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய அன்னிருவனத்தின் CEO சலீம் சயீத் அல் மித்ஃபா,” தாயகத்திற்காகவும் வீட்டினருக்காகவும் எத்தனையோ தியாகங்கள் செய்யும் அமீரகத்தின் பெண்களை கவுரவப்படுத்தவே இந்தத் திட்டம்” என்றார்.

AUTOXPRESS
1 Share
Share via
Copy link