UAE Tamil Web

அடக் கடவுளே..இதைத் திருடவா காம்பவுண்டு சுவர ஏறிக் குதிச்ச.. – நீதிமன்றத்திற்கு வந்த வினோத வழக்கு..!

court

ஷார்ஜா நன்னடத்தைகளுக்கான நீதிமன்றத்தில் நேற்று வினோத வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. ஷார்ஜாவில் உள்ள வில்லா ஒன்றின் உரிமையாளர் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி, வேலை விஷயமாக வேறு எமிரேட்டிற்கு சென்றிருக்கிறார்.

சில தினங்கள் கழித்து வீடு திரும்பிய அவர், தனது வீட்டு சிசிடிவி பதிவுகளைப் பார்த்த போது அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு நபர் வீட்டை நோட்டம் விடுவதையும் சில நிமிடம் கழித்து சுவர் ஏறிக் குதித்து வில்லாவிற்குள் வருவதையும் வில்லாவின் உரிமையாளர் பார்த்திருக்கிறார்.

வேகமாக உள்ளே வந்த நபர் அங்கிருந்த ஆரஞ்சு மரத்தில் இருந்து சில ஆரஞ்சுப் பழங்களைத் திருடிக்கொண்டு வெளியேறியிருக்கிறார். இதனையடுத்து உடனடியாக போலீசை நாடிய வில்லா உரிமையாளர்,” அவர் திருடியவற்றின் மதிப்பு குறித்து தான் கவலைப்படவில்லை எனவும், தான் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் அவர் நுழைந்தது தன்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அச்சம் விளைவிக்கக் கூடியது எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிசிடிவி பதிவுகளைக்கொண்டு ஆரஞ்சு ஆசாமியை போலீஸ் கைது செய்திருக்கிறது. வில்லாவின் அருகே நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டுமானப் பணியில் அவரும் வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

ஆசியாவைச் சேர்ந்த அந்நபர், தான் ஆரஞ்சுப் பழங்களை திருடவில்லை என போலீசிடம் தெரிவித்திருக்கிறார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விரைவில் தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap