UAE Tamil Web

திடீரென தீப்பிடித்து எரிந்த கார் – துணிந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்திய தொழிலாளர்களைப் பாராட்டிய காவல்துறை..!

ajman police

அஜ்மானின் அல் ருமைலா பகுதியில் இருக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதனையடுத்து அஜ்மான் சிவில் பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, அங்கிருந்த தொழிலாளர்கள் துரிதமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்திருக்கின்றனர். இதனால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்க முடிந்தது.

இதுகுறித்துப் பேசிய அஜ்மான் சிவில் பாதுகாப்புப் படையின் துணை இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் ரயீத் ஒபைத் அல் ஸாபி,” தொழிலாளர்கள் துரிதமாக சிந்தித்து செயல்பட்ட காரணத்தினால் தீயானது பிற கார்களுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது. கார் என்ஜினில் இருந்து தீயானது பரவியிருக்கிறது” என்றார்.

சுற்றுப்புறத்தின் பாதுகாப்புக் கருதி, துணிந்து செயல்பட்ட தொழிலாளர்களுக்கு அஜ்மான் சிவில் பாதுகாப்புத்துறை பாராட்டுத் தெரிவிப்பதாக ஸாபி குறிப்பிட்டார்.

ajman police
0 Shares
Share via
Copy link