உலகில் இந்தியர்களின் நம்பர் 1 சிறந்த இடமாக மாறிவரும் ஐக்கிய அரபு அமீரகம்…!

India's flag in UAE
Image Credits- Gulf News

துபாய்:

உலகிலேயே இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதல் இடத்தை பிடித்துள்ளது என்று லோக்சபாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கூறப்பட்டுள்ளது. 3.42 மில்லியன் இந்திய மக்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது.

2018 ஆம் ஆண்டு இறுதியில் 3.1 மில்லியனாக இருந்த மக்கள் தொகை தற்போது 3.2 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்தியாவை விட்டு வெளியே வசிக்கும் அல்லது பணிபுரியும் மொத்த மக்களில் 65% விழுக்காடு மக்கள் வளைகுடா நாடுகளில் இருக்கிறார்கள். அதிலும் ஆறு வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் அதிக இந்தியர்கள் வாழ்கிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. இந்தியர்கள் அதிகம் வாழும் மூன்றாவது இடத்தை அமெரிக்கா (US) பிடித்துள்ளது. இருந்த போதிலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதியில் வாழும் மொத்த இந்தியர்களின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு அளவு மக்கள் மட்டுமே அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.

ரிசர்வ் வங்கியின் கூற்று:

அதுமட்டுமில்லாமல் மத்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அரசாணைபடி 76.4 பில்லியன் டாலர் பணம் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து இந்தியாவிற்குள் வருகிறது. இது 2018 முதல் 2019 வரையிலான நிதி ஆண்டின் புள்ளி விவரமாகும். ஆனால் எந்தெந்த நாடுகளிலிருந்து பணம் வருகிறது என்பதற்கான தெளிவான விவரம் குறிப்பிடவில்லை.

வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களில் 55% விழுக்காடு மக்கள், தங்கள் பயணத்தின் ஒரு கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வழியாக செல்கிறார்கள் என்று மற்றுமொரு புள்ளி விவரம் காட்டுகிறது. அதே சமயம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும், அபுதாபி மற்றும் துபாய் ஹோட்டலில் தங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

எதிர்பார்ப்பு:

மேலும் துபாயில் எக்ஸ்போ 2020 (expo 2020) க்கு மிக பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படுவதால், இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...