UAE Tamil Web

“முகமே இனி பாஸ்போர்ட்”… பயண ஆவணங்களை காட்ட தேவையில்லை.! DXB-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் டிராவல் சிஸ்டம்

DXB

துபாய் விமான நிலையத்தில் தற்போது “ஸ்மார்ட் டிராவல்”முறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தாமல் பயணிக்கலாம்.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) ஒருங்கிணைந்த பயோமெட்ரிக் தொடர்பு இல்லா பாதை, 2019-ஆம் ஆண்டில் GITEX-ல் முதன் முதலில் வெளிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் GDRFA-வில் ஸ்மார்ட் டிராவல் சிஸ்டம் உயர் அதிகாரிகளால் இன்று முறையாக வெளியிடப்பட்டது.

தொற்றுக்கு பின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொடர்பு இல்லாத புதிய ஸ்மார்ட் டிராவல் சிஸ்டமானது, செக்-இன் கவுண்டர்கள் முதல் போர்டிங் வரை விமான பயணத்திற்கான ஒவ்வொரு கட்டத்திலும் ஊழியர்களுடனான தொடர்பைக் குறைக்கும். புதிய டச் பாயின்ட்ஸ்கள் இப்போது துபாய் வழியாக மற்றும் துபாயிலிருந்து பயணிக்கும் எமிரேட்ஸ் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளன

1

எதிர்காலத்தில் இமிகிரேஷன் முனையங்கள் இல்லா நிலை..!

முகம் மற்றும் கருவிழி அங்கீகாரத்தின் கலவையாக சமீபத்திய பயோமெட்ரிக் தொழில்நுட்ப பயன்பாடு இருக்கிறது. இந்த வசதி மூலம் பயணிகள் இப்போது தங்கள் விமானத்தை செக்-இன் செய்து கொள்ளலாம், இமிகிரேஷன் முறைகளை முடிக்கலாம், லவுஞ்ச்(lounge) வசதிகளில் நுழையலாம் மற்றும் விமான நிலையத்தில் ரிலாக்ஸாக உலாவிவிட்டு தங்கள் விமானங்களை பிடிக்கலாம்.

துபாயின் GDRFA இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் முகமது அகமது அல் மர்ரி பேசுகையில், “எதிர்காலத்தில், இமிகிரேஷன் முனையங்கள் இருக்காது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இமிகிரேஷன் நடைமுறைகளை முடிக்க எடுத்து கொள்ளப்படும் நேரம் என்பது முற்றிலும் ஒரு நபர் எவ்வளவு விரைவாக நடக்க முடியும் என்பதைப் பொறுத்தது என்றார்.

2

மேம்படுத்தப்பட்டுள்ள 122 ஸ்மார்ட் கேட்கள்..

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் முதல் மற்றும் வணிக வகுப்பு செக்-இன் கவுன்டர்களில் இது போன்று மொத்தம் எட்டு பதிவு முனையங்கள்(registration terminals) அமைக்கப்பட்டுள்ளன. முதல் மற்றும் வணிக வகுப்பு புறப்படும் முனையத்தில் குடியேற்ற கவுண்டர்களுக்கு அருகிலும் ஸ்மார்ட் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

துபாய் GDRFA-விலுள்ள துறைமுக விவகாரங்களின் பொது இயக்குநர் உதவியாளரான அதிகாரி பிரிகேடியர் தலால் அஹ்மத் அல் ஷாங்கெட்டி கூறுகையில், துபாய் விமான நிலையங்களின் புறப்பாடு மற்றும் வருகை ஹால்களில் 122 ஸ்மார்ட் கேட்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. முன் பதிவு செய்யும் பயணிகள் பயண ஆவணங்கள் தேவையின்றி இந்த அமைப்பை பயன்படுத்தலாம். செக்யூரிட்டி க்ளியரன்சிற்கு பின், பயணிகள் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லவுஞ்ச் பகுதிக்குள் நுழைந்து இறுதியாக தங்கள் விமானத்திலும் ஏறலாம் என்றார்.

மேலும் பேசிய அவர், பயணிகள் ஸ்மார்ட் கேட்ஸ் அல்லது புதிய ஸ்மார்ட் டன்னல் சிஸ்டமை தேர்வு செய்யலாம். அவர்கள் வாயிலில் நுழைய தங்கள் எமிரேட்ஸ் ஐடியை பயன்படுத்தலாம். அல்லது அந்த வாயில்களில் தங்களது முகத்தைக் காட்டி நுழையலாம். 17 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பயணிகளும் பயோமெட்ரிக் பாதைகளை (ஸ்மார்ட் சுரங்கம்) பயன்படுத்தலாம். “ஒவ்வொரு நாளும் குறைந்தது 3,000 பயணிகள் பயோமெட்ரிக் வாயில்களைப் பயன்படுத்துகிறார்கள். தடையற்ற பயணத்திற்காக ஸ்மார்ட் வாயில்கள் மாற்றியமைக்கப்பட்டது என்றார்.

புதிய அமைப்பை பயன்படுத்துவது எவ்வாறு.?

படி 1: ஸ்மார்ட் சுரங்க அமைப்பில் செக்-இன் செய்து பதிவு செய்ய வேண்டும்

GDRFA அதிகாரி ஒருவர் கூறும் போது, முழு செயல்முறையும் ஐந்து முதல் ஒன்பது வினாடிகள் வரை எடுக்கும் என்றார். முதல் முறையாக பயன்படுத்தும் பயனர்கள்(First-time users), செக்-இன் கவுன்டர்களில் அவர்களின் பாஸ்போர்ட்களை முக அங்கீகார அமைப்பில்(facial recognition system) ரிஜிஸ்டர் செய்யலாம். ஒரு முறை ரிஜிஸ்டர் செய்து விட்டால், அந்த நபரின் பாஸ்போர்ட் அல்லது விசா காலாவதியாகும் வரை அந்த ரிஜிஸ்டரேஷன் செல்லுபடியாகும். அது காலாவதியானதும், அவர்கள் தங்களை மீண்டும் சிஸ்டமில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார்.

பயோமெட்ரிக் பாதையில் உள்ள பல்வேறு டச் பாயின்ட்டுகள் மனிதர்களின் தொடர்புகளை குறைத்து ஒரு ஆரோக்கியமான தொடர்பற்ற பயணத்தை அனுமதிக்கின்றன. தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட உலகில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.

படி 2: இமிகிரேஷன்

பதிவு முடிந்ததும், தங்கள் போர்டிங் பாஸ்களில் ‘ஸ்மார்ட் சுரங்கம்’(Smart Tunnel) அச்சிடப்பட்ட பயணிகள் ஸ்மார்ட் சுரங்கப்பாதை வழியாக அங்கிருக்கும் கேமராவில் முகத்தை காட்டி தொடர்ந்து நடந்து செல்லலாம். பதிவு செய்யாத பயனர்கள் தங்கள் எமிரேட்ஸ் ஐடிகள் அல்லது பாஸ்போர்ட்களை ஸ்மார்ட் கேட்களில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட் வாயில்கள் அதன் டெர்மினலின் முன்னும், பின்னும் கதவுகளை கொண்டிருக்கும் வேளையில், ஸ்மார்ட் சுரங்க பாதையானது பயோமெட்ரிக் ஸ்கேனருடன் பொருத்தப்பட்ட ஒரு நீண்ட பாதையாக உள்ளது

படி 3: லவுஞ்ச் வசதிகளுக்கான அணுகல்.?

முதல் மற்றும் வணிக வகுப்பு பயணிகள் பயோமெட்ரிக் சேவையுடன் லவுஞ்ச் வசதிகளை பயன்படுத்தலாம்

படி 4: இறுதி போர்டிங்

பயணிகள் போர்டிங் வாயில்களில் அதே வழிமுறையை தங்கள் பயண ஆவணங்களைக் காட்டாமலேயே பயன்படுத்தி கொள்ளலாம்.

DXB
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap