UAE Tamil Web

ICA வின் பெயரில் அனுப்பப்படும் ஆபத்தான மெசேஜ்கள் – உஷார் மக்களே..!

hacker

சில மோசடி நபர்கள் மக்களின் அந்தரங்கத் தகவல்களை திருடும் நோக்கத்தோடு ICA வின் பெயரில் போலி மெசேஜ்களை அனுப்பிவருவதாகவும் மக்கள் ஜாக்கிரைதையாக இருக்கவேண்டும் எனவும் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான ஆணையம் (ICA) எச்சரித்துள்ளது.

மின்னஞ்சல்களின் உண்மைத்தன்மையை அறிந்தபின்னரே அதற்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டிருக்கும் இணையதளம்  ICA வின் அதிகாரப்பூர்வ இணையதளம் தானா? என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என ICA தெரிவித்துள்ளது.

போலியான மெசேஜ்கள் மூலமாக மக்களின் தகவல்களைத் திருட நினைக்கும் கும்பலிடமிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என ICA தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

hacker
0 Shares
Share via
Copy link