அமீரகத்தில் சமீப நாட்களில் வெப்பநிலை பூஜ்யத்தை தொடும் அளவிற்குக் குறைந்தது. இதனையடுத்து அல் அய்ன் பகுதியின் அல் ரக்னா-வில் உறைந்துபோன பனிக்கட்டியை ஆர்வத்தோடு பார்க்கும் மீர்காட் ஒன்றின் புகைப்படம் மற்றும் வீடியோவை பிரபல சமூக வலைத்தளமான ஸ்னாப்சாட்டில் வெளியிட்டுள்ளார் துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்.
الشيخ حمدان بن محمد بن راشد ال مكتوم ينشر توثيق مركز العاصفة لانخفاض درجة الحرارة دون الصفر المئوي في منطقة ركنه شمال مدينة العين ، من تصوير مركز العاصفة ❤🙋♂️ #مركز_العاصفة pic.twitter.com/LF1w2WncY7
— مركز العاصفة (@Storm_centre) January 12, 2021
ஒரு வாகனத்தின் மீது உறைந்துள்ள பனியின் மீது வைக்கப்பட்டுள்ள குளிர்பானப் போத்தல்களை மீர்காட் ஆர்வத்தோடு வலம் வருவது இளவரசர் வெளியிட்டுள்ள வீடியோவில் இடம்பெற்றுள்ளது.