அமீரகத்தில் டிரா எனப்படும் குலுக்கல் ரீதியிலான விளையாட்டுக்கு அரசே அனுமதியளித்துள்ளது. ஏற்கனவே அபுதாபி பிக் டிக்கெட், மஹ்சூஸ் டிரா போன்றவை வெற்றிகரமாக இயங்கிவரும் சூழ்நிலையில் இதற்குப் போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது எமிரேட்ஸ் டிரா.
அமீரக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 77,777,777 திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை இந்த எமிரேட்ஸ் டிரா வழங்குகிறது. அஜ்மானைச் சேர்ந்த இந்நிறுவனம் பவளப்பாறை வளர்த்தலை பரவலாக்குவதை நோக்கமாகக்கொண்டு இந்த போட்டியைத் துவங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் சமூக மக்களின் வளர்ச்சியை இணைந்து மேற்கொள்ள இத்திட்டம் பெருமளவில் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. சரி, இப்போட்டியில் கலந்துகொள்வது எப்படி எனப் பார்க்கலாம்.
எமிரேட்ஸ் டிராவின் இணையதளத்தில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எமிரேட்ஸ் நிறுவன விற்பனையாளர்களிடம் இருந்து கோரல் பாலிப்-பை (Coral Polyp) வாங்கினால் டிராவிற்குள் நுழைவதற்கான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படும். அதாவது எமிரேட்ஸ் டிராவில் உள்ள 7 எண்களைக்கொண்ட வரிசையை நீங்கள் நிரப்பலாம். சொல்ல மறந்துட்டேன் இந்த கோரல் பாலிப் ஒன்றின் விலை 50 திர்ஹம்ஸ்.
எத்தனை கோரல் பாலிப்பை வாங்குகிறீர்களோ அத்தனை லைன்கள் உங்களுக்கு ஒதுக்கப்படும். ஒவ்வொரு லைனிலும் 7 எண்களை நிரப்பலாம்.
0-9 வரையிலான 7 எண்களை நீங்களாகவோ அல்லது Quick Pick என்னும் வசதி மூலம் கணினியே தேர்ந்தெடுக்க அனுமதியளிக்கலாம். ஒருவேளை நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணை வேறுயாராவது முன்னரே தேர்ந்தெடுத்திருந்தால் நீங்கள் வேறு எண்ணைத் தான் கொடுக்க வேண்டியிருக்கும்.
உங்களுக்குப் பிடித்த எண்ணை நீங்கள் பதிவு செய்துகொள்ளலாம். தெரிவு செய்த எண்ணை எதிர்வரும் டிராவில் (CURRENT DRAW) பயன்படுத்தவும் அடுத்த 5 டிரா வரையில் (MULTIPLE UPCOMING DRAWS) பயன்படுத்தவும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
7 எண்களைத் தேர்வு செய்தபிறகு பணம் செலுத்துவதற்கான பகுதிக்குள் நுழைவீர்கள். இதில் இரண்டு வகையில் பணத்தினை நீங்கள் செலுத்தலாம். முதலாவது எமிரேட்ஸ் டிராவின் கிரெடிட் பேலன்ஸ் (credit balance). இந்த வசதியைப் பயன்படுத்த வேண்டுமென்றால் உங்களுடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக ஏற்கனவே கிரெடிட் பேலன்ஸ்-க்கு பணத்தினை அனுப்பியிருக்கவேண்டும்.
இல்லையென்றால் நேரடியாக உங்களது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக போட்டிக்குள் நுழையலாம். பணப்பட்டுவாடாவை நீங்கள் முடித்துவிட்டால் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்று வரும். அதற்கு Confirm கொடுத்தால் போதும். போட்டியில் நீங்களும் பங்குதாரர் ஆகிவிடுவீர்கள். அப்பறமென்ன.. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு எமிரேட்ஸ் டிராவின் இணையதளத்தில் அல்லது அதன் சமூக வலைத்தளப் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பப்படும் டிரா முடிவுகளை கவனிக்கவேண்டியதுதான்.
வெற்றியாளர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
அமீரகத்தின் மற்ற பரிசுப்போட்டிகளைப் போலவே, இதிலும் கணினி மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் பந்துகளின் அடிப்படையிலேயே வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். புரியவில்லையா? இப்படிச் சொன்னால் புரிந்துவிடும். போட்டிக்கு நீங்கள் 7 எங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் அல்லவா? அதேபோன்று டிரா நிகழும் அன்று கணினியின் உதவியுடன் 7 பந்துகள் தேர்ந்தெடுக்கப்படும் அந்த 7 பந்துகளிலும் 7 எண்கள் இருக்கும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த எண்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பந்துகளில் உள்ள எண்களும் ஒன்றாக இருந்தால் அதிர்ஷ்ட தேவதை உங்களது வீட்டு காலிங் பெல்லை அழுத்திவிட்டார் என்று அர்த்தம்.
- உங்களுடைய 7 எண்களும் டிராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 எண்களும் ஒன்றாக இருந்தால் கிராண்ட் பரிசான 77,777,777 திர்ஹம்ஸ் பரிசைப் பெறலாம்.
- உங்களுடைய 7 எண்களை டிராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்களோடு ஒப்பிடுகையில் 6 எண்கள் ஒன்றாக இருந்தால் 777,777 திர்ஹம்ஸ் பரிசை நீங்கள் பெறலாம்.
- உங்களுடைய 7 எண்களை டிராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்களோடு ஒப்பிடுகையில் 5 எண்கள் ஒன்றாக இருந்தால் 77,777 திர்ஹம்ஸ் பரிசை நீங்கள் பெறலாம்.
- உங்களுடைய 7 எண்களை டிராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்களோடு ஒப்பிடுகையில் 4 எண்கள் ஒன்றாக இருந்தால் 7,777 திர்ஹம்ஸ் பரிசை நீங்கள் பெறலாம்.
- உங்களுடைய 7 எண்களை டிராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்களோடு ஒப்பிடுகையில் 3 எண்கள் ஒன்றாக இருந்தால் 777 திர்ஹம்ஸ் பரிசை நீங்கள் பெறலாம்.
- உங்களுடைய 7 எண்களை டிராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்களோடு ஒப்பிடுகையில் 2 எண்கள் ஒன்றாக இருந்தால் 77 திர்ஹம்ஸ் பரிசை நீங்கள் பெறலாம்.
பரிசுப் பணத்தைப் பெறுவது எடுப்பது?
டிராவில் உங்களுக்கு பம்பர் பரிசு கிடைத்துவிட்டது என வைத்துக்கொள்வோம். பணத்தினை எப்படி வெளியே எடுப்பது? சொல்லிட்டா போச்சு..
- எமிரேட்ஸ் டிராவின் இணையதளத்தில் உங்களுடைய அக்கவுண்டிற்குள் செல்லவும்.
- இப்போது TRANSFER/ WITHDRAW என இரண்டு வசதிகள் உங்களுக்கு அளிக்கப்படும். ஒரு நிமிடம் இருங்கள்.
- இதில் TRANSFER எனும் வசதியைப் பயன்படுத்தினால் உங்களுடைய மொத்த பரிசுத்தொகையும் நேரடியாக கிரெடிட் பேலன்சிற்குச் சென்றுவிடும். முக்கியமாக ஒருமுறை TRANSFER செய்த தொகையை மீண்டும் உங்களால் பெற முடியாது. அப்படியானால் உங்களுடைய பரிசுத்தொகை அனைத்தையும் மீண்டும் இப்போட்டியில் பங்கேற்க மட்டுமே பயன்படுத்தமுடியும். ஆகவே ஜாக்கிரதை.
- அடுத்ததாக நீங்கள் எடுக்க விரும்பும் பணத்தினை குறிப்பிடவும். இப்போது BANK TRANSFER அல்லது CASH TRANSFER என்ற இரு வசதிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி உங்களுடைய பணத்தினைப் பெறலாம்.
- இதற்காக உங்களுக்கு உறுதி மின்னஞ்சல் ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும்.
அமீரகம் மட்டுமல்லாமல் வேறு நாடுகளில் இருப்பவர்களும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். ஆனால், உங்களுக்கு கிராண்ட் பரிசு கிடைக்கும்பட்சத்தில் நீங்கள் அமீரகத்திற்கு வந்துதான் பரிசைப் பெற முடியும். அதேபோல, பரிசுத்தொகை அமீரக திர்ஹம்ஸாக மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்பது குறித்த மேலதிக சந்தேகங்களுக்கு +971 (0)9 2377723 என்ற எண்ணிற்கு எமிரேட்ஸ் டிரா நிறுவனத்தினைத் தொடர்புகொள்ளலாம். மின்னஞ்சல் அனுப்ப customersupport@emiratesdraw.com என்னும் முகவரியைப் பயன்படுத்தலாம்.
எமிரேட்ஸ் டிரா போன்று அமீரகத்தில் நடைபெற்றுவரும் பிற டிராவில் பங்கேற்கும் வழிமுறைகள் குறித்து கீழே காணலாம்.
பிக் டிக்கெட்டில் பங்கேற்பது குறித்து தெளிவாகத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
மஹ்சூஸ் டிராவில் கலந்துகொள்வது பற்றி விலாவரியான விபரங்களை அறிய இங்கே கிளிக்கவும்.