UAE Tamil Web

அமீரகத்தின் Rashid Rover.. இன்னும் சில மாதங்களில் நிலவில் தரையிறங்கும் – விஞ்ஞானிகள் குழுவை நேரில் சென்று பாராட்டிய ஜனாதிபதி ஷேக் முகமது

அமீரகத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் எமிரேட்ஸ் லூனார் மிஷன் குழு உறுப்பினர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட ஜனாதிபதி, ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில் “இந்த வரலாற்றுத் திட்டம் விண்வெளித் துறையில் அமீரகத்தின் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்துகிறது மற்றும் நமது மக்கள் தங்கள் நாட்டிற்கும் மனித குலத்திற்கும் சேவை செய்ய அவர்களின் அறிவையும் திறமையையும் பயன்படுத்த உதவுகிறது” என்றார்.

வெளியான ஒரு புகைப்படத்தில், அமீரகத்தின் ஜனாதிபதி இந்த ஆண்டின் பிற்பகுதியில் சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ள ரஷித் ரோவரைச் சரிபார்ப்பதைக் நம்மால் காணமுடிகிறது. நிலவின் மேற்பரப்பில் அரபு உலகின் முதல் பயணத்தை இது குறிக்கும்.

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், குழுவுடனான தனது சந்திப்பின் புகைப்படங்களை ட்வீட் செய்து, “அடுத்த சில மாதங்களில்” ராஷித் ரோவர் நிலவில் தரையிறங்கும் என்பதை உறுதிப்படுத்தினார். .

“இந்த ரோவர் நமது மக்களின் நம்பிக்கைகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் மற்றும் நிலவின் மேற்பரப்பில் இருந்து நமது நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அறிவியல் கட்டத்திற்கு வழி வகுக்கும்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap