UAE Tamil Web

நிலவிற்குச் செல்ல இருக்கும் அமீரக விண்கலத்தில் இடம்பெறும் “கையெழுத்து” – யாருடையது தெரியுமா?

UAE Moon logo

அரபு உலகின் நிலவிற்கான முதல் விண்கலத்தை அனுப்பும் நாடு என்னும் பெருமையை அமீரகம் பெற இருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளிவந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் தற்போது இந்த விண்வெளித் திட்டத்திற்கான புதிய லோகோ ஒன்றினை, துபாயின் பட்டத்து இளவரசரும் துபாயின் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) வெளியிட்டுள்ளார்.

இளவரசர் வெளியிட்டுள்ள லோகோவில் நவீன துபாயைக் கட்டமைத்தவர் என்றழைக்கப்படும் மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் (Sheikh Rashid bin Saeed Al Maktoum) அவர்களின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.

லோகோவில் அமீரக கொடியும் ஏழு நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. அமீரகத்தில் உள்ள ஏழு எமிரேட்களை குறிக்கும் விதமாக இந்த நட்சத்திரங்கள் அமைந்துள்ளன.

100 சதவிகிதம் அமீரகத்திலேயே தயாராகும் இந்த ரஷீத் விண்கலம் 2024 ஆம் ஆண்டு நிலவின் அதிகம் அறியப்படாத இடங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

UAE Moon logo
0 Shares
Share via
Copy link