fbpx
UAE Tamil Web

அமீரகம்: ஷேக் அப்துல்லா அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது..!

sheik abdulla

அமீரகத்தின் வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சரான ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Abdullah bin Zayed Al Nahyan) அவர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

” கொரோனா தடுப்பு மருந்து வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான வழி ” என ஷேக் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனாவிற்கான தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்டத்தின் ஆய்வுகள் அமீரகத்தில் நடைபெற்றுவந்த நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு இத்தடுப்பு ஊசியை அளிக்க அமீரக அரசு சமீபத்தில் அனுமதியளித்தது.

இதன் நீட்சியாக அபுதாபி பள்ளி ஆசிரியர்கள், ஷார்ஜா விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மூன்றாம் கட்ட சோதனையை அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் குரூப் 42 மற்றும் சீனாவின் மருந்தக துறை ஜாம்பவானான சினோபார்ம் (Sinopharm) ஆகியவை இணைந்து மேற்கொண்டுவருகின்றன.

அமீரகத்தின் முக்கிய தலைவர்கள் பலருக்கும் இந்த கொரோனா தடுப்பு மருந்தானது அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.