UAE Tamil Web

தொலைபேசியில் தன்னை அழைத்த மொராக்கோ மன்னரிடம் பாராட்டு தெரிவித்த அபுதாபி இளவரசர்.!

moroco

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமை துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், மொராக்கோ மன்னர் ஆறாம் முகமதுவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பை பெற்றார்.

- Advertisment -

தொலைபேசியில் உரையாடிய இருவரும் தங்களது நாடு மற்றும் நாட்டு மக்களின் சகோதர உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மதிப்பாய்வு செய்தனர். சர்வதேச விவகாரங்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். சமீபத்திய பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்த கருத்துக்களை இருவரும் பரிமாறிக் கொண்டனர்.

அப்போது இஸ்ரேலுடனான அதிகாரப்பூர்வ தொடர்புகள் மற்றும் ராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான அதன் மொராக்கோவின் முடிவை ஷேக் முகமது பாராட்டி வரவேற்றார். இந்த நேர்மறையான நடவடிக்கை பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் அமைதிக்கான தேடலை பலப்படுத்தும் என்று மன்னர் ஆறாம் முகமதுவிடம் குறிப்பிட்டார்.

அதே போல மொராக்கோவின் இறையாண்மையை பல மட்டங்களில் ஆதரிக்கும் உண்மையான நிலைப்பாட்டிற்கு மொராக்கோ மன்னர், ஷேக் முகமதுவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.அமீரகம் மற்றும் மொராக்கோ இடையேயான நீண்டகால சகோதரத்துவ உறவுகள் குறித்த பெருமையையும், அனைத்து நிலைகளிலும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான முயற்சிகள் தொடரும் என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.