UAE Tamil Web

அபுதாபியின் பட்டத்து இளவரசரை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்..!

Indian Minister of External Affairs

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர் நேற்று சந்தித்தார்.

அல் ஷாதி அரண்மனைக்கு வருகைதந்த இந்திய அமைச்சரை பட்டத்து இளவரசர் வரவேற்றார். அரசியல், முதலீடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட துறைகளில் இருநாட்டு உறவுகள் குறித்து இருவரும் உரையாடினர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த செய்யவேண்டியவை குறித்தும் இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நிலைப்பாடுகளில் இருநாடுகளின் பார்வைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

அமீரகம் மென்மேலும் வளரவும் புதிய உயரங்களை அடையவும் இந்தியப் பிரதமர் வாழ்த்துவதாக அமைச்சர் இளவரசரிடம் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமருக்கு நன்றிகளைத் தெரிவித்த இளவரசர், இந்திய மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இருநாட்டு உறவுகள் நீடித்த பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டிருப்பதாகவும், இதற்கு காரணமாக இருக்கும் இருநாட்டு தலைவர்களின் ஒத்துழைப்பைப் போற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, மாநில வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். அன்வர் பின் முகமது கார்கேஷ் (Anwar bin Mohammed Gargash), அபுதாபி நிர்வாக விவகார ஆணையத்தின் தலைவர் கல்தூன் கலீஃபா அல் முபாரக் (Khaldoon Khalifa Al Mubarak), அபுதாபி பட்டத்து இளவரசரின் நீதிமன்ற துணைச்செயலாளர் முகமது முபாரக் அல் மஸ்ரோயி (Mohammed Mubarak Al Mazrouei) மற்றும் இந்தியாவில் இருந்து அமைச்சருடன் வந்திருந்த உயரதிகாரிகளும் உடனிருந்தனர்.

Indian Minister of External Affairs
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap