UAE Tamil Web

சகோதரர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் – வைரலாகும் அமீரக ஆட்சியாளரின் ட்வீட்..!

Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisment -

“உலகில் உள்ள அனைவருக்கும் இந்த நன்னாளிலே கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நற்பண்புகள், அமைதி, ஆரோக்கியம் மற்றும் அன்பினை இறைவன் எல்லோருக்கும் வழங்கட்டும்” என துபாய் ஆட்சியாளர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

இளவரசர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” அமீரகம் மற்றும் உலகமெங்கிலும் வாழும் என்னுடைய கிறிஸ்தவ சகோதர சகோதர்களுக்கு அமைதியை இந்த கிறிஸ்துமஸ் கொடுக்கட்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாசகர்கள் அனைவருக்கும் UAE Tamil Web குழு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.