UAE Tamil Web

அமீரகத்தில் குளிர்காலம் இந்த நாளில் துவங்குகிறது.! தேதியை அறிவித்த தேசிய வானிலை மையம்..

winter

அமீரகத்தில் இந்த மாதம் வெப்பநிலை 3 முதல் 6 டிகிரி சென்டிகிரேட் வரை குறையும். மாத இறுதியில் குளிர்காலம் தொடங்குவதால் நாட்டில் வெப்பநிலை குறையும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

- Advertisment -

இது பற்றி தகவல் தெரிவித்துள்ள தேசிய வானிலை ஆய்வு மையம்(NCM), அமீரகத்தில் இலையுதிர் பருவத்தின் கடைசி மாதமாக டிசம்பர் கருதப்படுவதாக கூறியுள்ளது. மாத இறுதியில் குறிப்பாக டிசம்பர் 23 அன்று அமீரகத்தில் நடப்பாண்டு குளிர் சீசன் துவங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் மாதம் என்பது குளிர்காலத்தின் தொடக்கம். இந்த மாதத்தில் அதிகபட்ச மற்றும் சராசரி காற்றின் வெப்பநிலை குறைகிறது என்று NCM கூறியுள்ளது. மேலும் தகவல் தெரிவித்துள்ள வானிலை மையம், குறிப்பாக உட்பகுதியில் மற்றும் மலைப்பகுதிகளில் வடமேற்கு காற்று ஓட்டத்தினால் இரவு நேரங்களில் காற்று வெப்பநிலை கணிசமாகக் குறைகிறது.

டிசம்பர் மாதத்தில்குறைந்த மற்றும் நடுத்தர மேகங்களின் வளர்ச்சியால் மேற்கு மேல் காற்று காரணமாக நாடு பாதிக்கப்படும். சில நேரங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறியுள்ளனர். அரேபிய வளைகுடாவில் ஈரமான மற்றும் மிதமான காற்று நாட்டை நோக்கிச் செல்வதால், குறிப்பாக அதிகாலையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இது மூடுபனி உருவாவதற்கு சாதகமான நிலை.

அதிகாரிகளின் கூற்றுப்படி, டிசம்பரில் சராசரி வெப்பநிலை 18 ° செல்ஸியஸ் முதல் 21.6 ° செல்ஸியஸ் வரை இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை 22 ° செல்ஸியஸ் முதல் 27 ° செல்ஸியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 13 ° செல்ஸியஸ் முதல் 17 ° செல்ஸியஸ் வரையிலும் இருக்கும்.டிசம்பரில் காற்றின் சராசரி வேகம் 11 கி.மீட்டராக இருக்கும். சராசரி ஈரப்பதம் 63 சதவீதமாகும், அதிகபட்சம் 81 % முதல் 90 % வரையிலும், குறைந்தபட்சம் 32% முதல் 49% வரையிலும் இருக்கும் என்று கூறியுள்ளனர்.