37.7 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

முக்கியச் செய்தி: சாலை விபத்தில் சிக்கி அமீரக அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பலி.!

uae,-royal,-dies,-mualla,-dubai

அமீரக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர் இன்று காலை நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக Wam செய்தி நிறுவனம் அறிவித்திருக்கிறது.

“இன்று காலை நிகழ்ந்த கார் விபத்தில் இறந்த ஷேக் அலி பின் ஹுமைத் பின் அகமது அல் முஅல்லா (Sheikh Ali bin Humaid bin Ahmed Al Mualla) அவர்களுடைய மரணத்திற்கு உச்ச சபையின் உறுப்பினரும் உம் அல் குவைனின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சவுத் பின் ரஷீத் அல் முஅல்லா (Sheikh Saud bin Rashid Al Mualla) அவர்கள் இரங்கல் தெரிவித்திருப்பதாக அரச நீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவரின் தந்தையான ஷேக் ஹுமைத் பின் அகமது அல் முஅல்லா (Sheikh Humaid bin Ahmed Al Mualla) அவர்களுக்கும் இறந்தவரின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும், இறந்தவருக்கு அல்லா அமைதியைத் தரவும் பிரார்த்திப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலம் என்பதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலமாக ஷேக் ஹுமைத் பின் அகமது அல் முஅல்லா அவர்களுக்கு இரங்கல் செய்திகளை தெரிவிக்குமாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!