UAE Tamil Web

ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த உகாண்டா நாட்டுப் பெண்ணால் பரபரப்பு.. சிறையில் அடைத்த காவல்துறையினர்!

சார்ஜாவில் இருந்து போதை பொருளை வயிற்றுற்குள் வைத்து கடத்தி வந்த உகாண்டா நாட்டை சேர்ந்த பெண்ணை கோவை விமான நிலைய சுங்கதுறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சார்ஜாவிலிருந்து கோவை இடையேயான ஏர் அரேபியா விமானத்தில் கோவை விமான நிலையம் வந்த உகாண்டா நாட்டை சேர்ந்த பெண்ணான சான்ரா நாண்டேசா சந்தேகப்படும் படியாக வந்த நிலையில், அந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சுங்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு அந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்க சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் அதிகரித்தன.

இதனையடுத்து அதிகாரிகள் அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று விசாரித்ததில் பெண்ணின் வயிற்றில் போதை பொருள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அப்பெண்ணை ஸ்கேனில் சோதனை செய்து பார்த்த அதிகாரிகள் போதை பொருளை மாத்திரை கேப்சூலில் அடைத்து அதனை வயிற்றுக்குள் விழுங்கியிள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து உகாண்டா நாட்டு பெண்ணை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ கண்காணிப்பில் வைத்து அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

பின்னர் பெண்ணின் வயிற்றில் இருந்து வெளிவந்த 81 கேப்சூல்களை அதிகாரிகள் எடுத்து ஆய்வுக்காக அனுப்பினர். அப்போது அது “மேத்தா பெதமின் போதை பொருள்” என்றும் இதன் மதிப்பு 4 கோடி என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண்ணை கைது செய்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap