UAE Tamil Web

அமீரகம், இந்தியாவை ரெட் லிஸ்டிலிருந்து விடுவித்தது பிரிட்டன்..!

UAE Airport

ஐக்கிய ராஜ்ஜியத்தின் சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்த அமீரகம் தற்போது ஆம்பர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதேபோல, இந்தியா, பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளும் சிவப்பு பட்டியலில் இருந்து ஆம்பர் பட்டியலுக்கு மாறியுள்ளன.

இந்த அறிவிப்பு ஆகஸ்டு 8 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு (ஐக்கிய ராஜ்ஜியத்தின் நேரப்படி) நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஐக்கிய ராஜ்ஜியத்தின் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ்,” தடுப்பூசித் திட்டத்தின் பலனாக சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் துவங்கியுள்ளோம். குடும்பங்கள் ஒன்றிணையவும் தொழில்துறை வளர்ச்சிக்கும் இது அத்தியாவசியமானது” என்றார்.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் எனவும் இந்த முடிவு போக்குவரத்தை சார்ந்து இயங்கும் நிறுவனங்களுக்கு பெருமளவில் ஆதாயத்தை வழங்கும் என்றும் ஷாப்ஸ் தெரிவித்தார்.

UAE Airport
0 Shares
Share via
Copy link