உக்ரைன் மக்களுக்கு வழங்கி வந்த விசா இன்றி பயணிக்கும் திட்டத்தை நிறுத்துவதாக அமீரகம் அறிவித்துள்ளது.
அமீரகத்தின் அறிவிப்பு குறித்து துபாயில் உள்ள உக்ரைன் தூதரகம் சமூக வலிதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், தற்காலிகமாக இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடைக்கான காரணம் குறித்து எவ்வித விளக்கமும் அமீரகம் அளிக்கவில்லை.
இந்த தடை உத்தரவானது அமீரகத்தில் இருக்கும் உக்ரைன் மக்களுக்கு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் மக்களுக்கு 5 மில்லியன் டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக அமீரகம் தெரிவித்துள்ளது.
