அமீரகத்தில் ரமலான் மாதம் துவங்க இருக்கும் நிலையில் பல்வேறு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக அமீரகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வேலை நேரங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் ரமலான் மாதத்தில் உம் அல் குவைனில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 3 நாள் வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உம் அல் குவைன் அரசு ஊழியர்கள் திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மதியம் 2:30 மணி வரை பணியாற்று வேண்டும் என்றும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களும் வார இறுதி விடுமுறை எனவும் கூறப்பட்டுள்ளது.