UAE Tamil Web

ஹோட்டல்களில் 100% வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம் – வெளிவந்த புதிய அறிவிப்பு..!

Stock-Umm-Al-Quwain-UAQ-skyline_

உம் அல் குவைனின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி பல்வேறு சமூக நிறுவனங்கள் எத்தனை சதவீதம் வாடிக்கையாளர்களுடன் இயங்க வேண்டும் என்ற புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்தப் புதிய அறிவிப்பின் படி,

  • ஹோட்டல்கள் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.
  • ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரன்ட்கள், கஃபேக்கள், பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவை 80 சதவிகித மக்களுடன் இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது.
  • பல்வேறு வகையான பொதுப்போக்குவரத்துகள் 75 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.
  • திருமண மையங்கள், விழா அமைவிடங்கள் 60 சதவிகித மக்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திருமண மையங்களில் அதிகபட்சமாக 300 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டுமென கமிட்டி தெரிவித்துள்ளது.
  • கொரோனா விதிமுறையை மக்கள் மற்றும் நிறுவனங்கள் சரியான முறையில் பின்பற்றுகின்றனரா என்பதைக் கண்காணிக்க ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் கமிட்டி எச்சரித்துள்ளது.

சமூக பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக கமிட்டி தெரிவித்துள்ளது.

Stock-Umm-Al-Quwain-UAQ-skyline_
1 Share
Share via
Copy link