UAE Tamil Web

குரூரமாக தாக்கப்பட்ட நாய்க்காக ஒன்று கூடிய நெட்டிசன்கள் – அமீரகத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..!

wounded dog

உம் அல் குவைனில் கடுமையாக தாக்கப்பட்ட நாய் பலத்த காயங்களுடன் தனித்து விடப்பட்டிருக்கிறது. இதனை அறிந்த விலங்குகள் நல வாழ்வு ஆர்வலர்கள் தனித்து விடப்பட்ட நாய்களுக்கான மையத்திற்கு (SDC) அந்நாயினை தூக்கிச்சென்றிருக்கிறார்கள்.

- Advertisment -

நாயின் முதுகெலும்பு முழுவதும் சேதமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். “அதன் காயங்கள் மற்றும் செப்டிக் ஆன பகுதிகளுக்கு தனித்தனியான ஆண்டிபயாட்டிக் மருந்துகள் உடனடியாக அளிக்கப்படவேண்டும்” என உம் அல் குவைன் SDC யின் தலைவர் அமிரா வில்லியம் தெரிவித்தார்.

“அதன் (நாய்) கீழ் பகுதி கடுமையாக சேதமடைந்திருக்கிறது. ஆனாலும் தற்போது அதன் உடல்நிலை சீராகவே இருக்கிறது. அதனுடைய உயிரைக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. நேற்றைவிட இன்று அதன் உடல்நிலை தேறியிருக்கிறது. இன்று அதனால் தலையை தூக்கிப் பார்க்க முடிகிறது” என வில்லியம் தெரிவித்தார்.

மேலும் நாய் அனப்ளாஸ்மா என்னும் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது டிக் போர்னே நோய்க்கு வழிவகை செய்துவிட்டது. இதுவே நாய்க்கு கட்டுப்படுத்த முடியாத ரத்தக் கசிவும் காய்ச்சலும் வரக் காரணமாக அமைந்திருக்கிறது.

இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன. நாயினை இப்படித் தாக்கியவன் யாரென்று CCTV கேமராக்களின் மூலமாக தேடுதல் நடைபெற்றுவருகிறது.

அமீரக சட்டப்படி விலங்குகளை துன்புறுத்துவது கொடிய குற்றமாகும். பிராணிகளை வதைப்போருக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும், 2 லட்சம் திர்ஹம்ஸ் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர்.

இணையத்தில் பெருகும் கண்ணீர்

குரூரமாக தாக்கப்பட்ட இந்த நாயினைப் பற்றி சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது முதல் பல்வேறு மக்கள் இதற்காகப் பிரார்த்தித்து வருகிறார்கள். நாய் நல்முறையில் குணமாகி வர விரும்புவதாக ஏராளமான மக்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருக்கின்றனர்.

SDC க்கு புதிய தங்குமிடம் அமைத்துத்தரும் பணியில் உள்ளூர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.