உச்ச சபையின் உறுப்பினரும் உம் அல் குவைனின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சவுத் பின் ரஷீத் அல் முஅல்லா அவர்கள் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோசைப் பெற்றுக்கொண்டார்.
21-28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் தற்போது உம் அல் குவைன் ஆட்சியாளருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட இரண்டாவது ஆட்சியாளராக ஷேக் சவுத் அறியப்படுகிறார்.
இதற்கு முன்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார்.