UAE Tamil Web

அமீரகத்தில் வாகனங்களுக்கான புதிய நம்பர் பிளேட்டுகள் அறிமுகம்.! பழைய நம்பர் பிளேட்டுகளை மாற்ற வேண்டுமா.?

number

அமீரகத்தில் வாகனங்களுக்கான புதிய நம்பர் பிளேட் டிசைன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய வாகன நம்பர் பிளேட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக உம் அல் குவைன் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

- Advertisment -

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பலவிதமான புதிய நம்பர் பிளேட் ஸ்டைல்களில் இருந்து வாகன ஓட்டிகள் தங்களுக்கு பிடித்தமான ஸ்டைலை கொண்ட நம்பர் பிளேட்டை தேர்வு செய்யலாம். இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள உம் அல் குவைன் போலீஸின் உரிமம் வழங்கும் துறை(Department of licensing), வாகன ஓட்டிகள் “தங்கள் பழைய நம்பர் பிளேட்டுகளையே வைத்திருக்கலாம். புதிய நம்பர் பிளேட்டுகளை மாற்றுவது கட்டாயமில்லை.

பழைய நம்பர் பிளேட்டுகளை மாற்றிக்கொள்ள விரும்பும் வாகன ஓட்டிகள், புதிய நம்பர் பிளேட்டுகளை இலவசமாகவே மாற்றி கொள்ளலாம்” என்று கூறியுள்ளது.அறிமுகமாகியுள்ள புதிய நம்பர் பிளேட்டுகளில் ஸ்போர்ட்டி மற்றும் ஸ்டைலான மாடல்கள் அடங்கும், இது டிரைவர்களுக்கு கூடுதல் விருப்பங்களை அளிக்கிறது என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

new-vehicle-number-plate-designs-launched-in-uaeபுதிய நம்பர் பிளேட்டை பயன்படுத்த விரும்புவோர் உரிமத் துறையின் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையத்தை தொடர்பு கொள்ள கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.