UAE Tamil Web

கொரோனா விதிமுறை மீறல்: திருமண விழாவை நிறுத்திய அமீரக அதிகாரிகள்..!

Wedding

உம் அல் குவைன்: பல்வேறு கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறை மீறல்களுடன் நடைபெற்ற திருமண விழாவை காவல்துறை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.

- Advertisment -

அல் ஸ்வேய்ஹாத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர். அமீரக அரசு விதித்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளின்படி திருமண நிகழ்ச்சிகளில் 10 பேர் மட்டுமே கலந்துகொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமண விழாவில் பங்கேற்ற பலர் முகக்கவசம் அணியாமலும், போதிய சமூக இடைவெளி விடாமலும் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மக்கள் அனைவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக பின்பற்றி சமூக பாதுகாப்பை உறுதிசெய்ய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என உம் அல் குவைனின் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.