UAE Tamil Web

உம் அல் குவைன் முன்னாள் ஆட்சியாளரின் மனைவி மறைவு – இரங்கல் தெரிவித்த அமீரக ஆட்சியாளர்கள்..!

uae flag

உம் அல் குவைனின் முன்னாள் ஆட்சியாளரான ஷேக் ரஷீத் பின் அஹமத் அல் முவல்லா அவர்களுடைய மனைவியான ஷேக்கா ஷம்சா பின்ட் மஜீத் நேற்று காலமானார்.

1981 ஆம் ஆண்டுமுதல் 2009 ஆம் ஆண்டுவரை உம் அல் குவைனின் ஆட்சியாளராக இருந்த அஹமத் முவல்லா – ஷேக்கா ஷம்சா தம்பதிக்கு ஷேக் முகமது பின் ரஷீத், அப்துல்லா பின் ரஷீத், அலி பின் ரஷீத் மற்றும் மார்வன் அல் ரஷீத் முவல்லா என நான்கு மகன்கள் இருக்கிறார்கள்.

ஷேக்கா ஷம்சா மறைவிற்கு உம் அல் குவைன் அரச நீதிமன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவித்துள்ளது.

அமீரக ஆட்சியாளர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் ஷேக்கா ஷம்சா மறைவிற்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளர் ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி, ஷார்ஜாவின் ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி, அஜ்மான் ஆட்சியாளர் ஷேக் ஹுமாயித் பின் ரஷீத் அல் நுவைமி, புஜைராவின் ஆட்சியாளர் ஷேக் ஹமாத் பின் முகமது அல் ஷர்கி ஆகியோர் ஷேக்கா ஷம்சா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஷேக்கா ஷம்சாவின் இறுதிச் சடங்கு உம் அல் குவைனின் அல் ராஸ்-ல் உள்ள ஷேக் ரஷீத் பின் அஹமத் அல் முவல்லா மசூதியில் இன்று காலை நடைபெற்றது.

uae flag
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap