UAE Tamil Web

அமீரகத்தில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவோருக்கு செக் வைத்த அரசு – புதிய ரேடார்கள் பொருத்தம்..!

Speeding Violation

உம் அல் குவைனில் அல் நிஃபா பகுதியில் புதிய ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரேடார்களில் அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிலோமீட்டராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் பஃபர் வேகம் 20kmph ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாகனவோட்டிகள் நிர்ணயிக்கப்பட்ட மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்திற்கு (பஃபர் வேகத்துடன் சேர்த்து) அதிகமான வேகத்தில் பயணித்தால் ரேடாரில் வாகனவோட்டி சிக்குவார்.

சமீபத்தில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குபவர்களை கண்காணிக்க உம் அல் குவைன் முழுவதும் பல்வேறு இடங்களில் ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளது.

“சில ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளையும் வேக வரம்புகளையும் புறக்கணித்து, சாலை பயனர்களின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். வேக மீறல்களுக்காக பிடிபடுவது பெரும்பாலும் இளம் ஓட்டுனர்கள் தான். பெடரல் போக்குவரத்து விதிகளின்படி, மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்திற்கு அதிகமான வேகத்தில் வாகனத்தை இயக்கினால் 3,000 திர்ஹம்ஸ் அபராதமும் 23 கரும்புள்ளிகளும் 60 நாட்கள் வாகன சிறைப்பிடிப்பும் இருக்கும்” என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

அதிவேகத்தில் செல்பவர்களைக் கண்காணிக்கும் விதமாக நிலையான மற்றும் மொபைல் ரேடார்கள் பொருத்தும் பணிகள் துவங்கப்பட இருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Speeding Violation
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap