UAE Tamil Web

குவைத் விடுதலை மற்றும் தேசிய தினம்: வாழ்த்துக்கள் தெரிவித்த உம் அல் குவைன் ஆட்சியாளர்..!

umm al quwain ruler

குவைத் நாட்டின் தேசிய மற்றும் விடுதலை தினம் நாளை கொண்டாடப்பட்ட இருக்கிறது. இந்நிலையில் உச்ச சபையின் உறுப்பினரும் உம் அல் குவைன் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சவுத் பின் ரஷீத் அல் முவல்லா தனது வாழ்த்துக்களை குவைத் நாட்டின் தலைவரான ஷேக் நவாப் அல் அகமது அல் ஜாபர் அல் சபா அவர்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, குவைத் நாட்டின் பட்டத்து இளவரசரான ஷேக் மிஷால் அல் அகமது அல் ஜாபர் அல் சபா அவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை உம் அல் குவைன் ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.

உம் அல் குவைனின் பட்டத்து இளவரசரான பெருமதிப்பிற்குரிய ஷேக் ரஷீத் பின் சவுத் பின் ரஷீத் அல் அல் முவல்லா அவர்களும் குவைத் நாட்டின் தலைவர் மற்றும் பட்டத்து இளவரசருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

umm al quwain ruler
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap