UAE Tamil Web

முக்கியச் செய்தி: எரிந்து சாம்பலான தொழிற்சாலை – 40 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு..!

Fire-in--UAQ-factory_

உம் அல் குவைன்: உம் அல் தூப்  இண்டஸ்ட்ரியல் பகுதியில் அமைந்துள்ள ஆலையில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஆலையில் பணிபுரிந்த 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பத்திரமான இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

நேற்று மாலை 5.10 மணிக்கு இந்த தீவிபத்து குறித்து உம் அல் குவைன் சிவில் பாதுகாப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயினை பரவவிடாமல் உடனடியாக அணைத்தனர். அதன்பின்னர் மேற்கட்ட விசாரணைகளுக்காக இந்த இடம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட்டது.

இதுகுறித்துப் பேசிய உம் அல் குவைன் சிவில் பாதுகாப்புப் படையின் இயக்குனர் கர்னல் டாக்டர் சலீம் ஹமாத் பின் ஹம்தா,” தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த பணியில் உம் அல் குவைன் காவல்துறை, எதிஹாட் நீர் மற்றும் மின்சார நிறுவனம் மற்றும் தேசிய ஆம்புலன்ஸ் ஆகியவையும் தங்களது சிறப்பான ஒத்துழைப்பை அளித்தன” என்றார்.

இந்தப் பணியானது உம் அல் குவைன் சிவில் பாதுகாப்புப் படையின் தற்காலிக இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் அகமது சலீம் பின் ஷாகி, ஒருங்கிணைப்பு மையத்தின் இயக்குனர் மேஜர் அப்துல்லா சலே அல் ஃபலாஹி, நிர்வாக மையத்தின் இயக்குனர் மேஜர் அகமது புகாரூன் மற்றும் அல் அக்ரான் மைய அதிகாரி, லெப்டினன்ட் ரஷீத் ஹர்ப் ஆகியோரின் தலைமையின் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Fire-in--UAQ-factory_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap