ஷார்ஜா காவல்துறையின் ஜெனரல் கமாண்டின் குற்றப் புலனாய்வுத் துறையினர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் ஆசிய நாட்டைச் சேர்ந்தவரைக் கைது செய்துள்ளனர்.
ஷார்ஜாவில் 6-வது தொழில்துறைப் பகுதியில் பங்களாதேஷை சேர்ந்த நபரை கத்தியால் குத்தியதால் குற்றவாளி கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவரின் கண்களில் மிளகாயை தெளித்து, பின்னாலிருந்து கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்யபட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து இரவு போலிஸ் செயல்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது, இதனையடுத்து ஆசிய நாட்டைச் சேந்த குற்றவாளி கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மேல் நடவடிக்கைக்காக பொது வழக்கறிஞர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அது போன்று ஷார்ஜா தொழில்துறை பகுதியில் அழுகிய நிலையில் இந்தியரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக ஷார்ஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைக்காக உடல் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு மாற்றப்பட்டதாக போலிஸார் தெரிவித்தனர்.