அனைத்து அமீரக மருத்துவமனைகளோடும் நோயாளிகளின் விவரங்கள் இணைக்கப்படும் புதிய திட்டம்.!

unified health file system

ஒரு நோயாளியின் மருத்துவ பதிவுகளை நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளோடும் இணைக்கும் மற்றும் அணுகும் புதிய ஒருங்கிணைந்த மருத்துவ கோப்பு முறைமை (unified electronic health file system) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் கடந்த (February 11 2020) செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரு குறிப்பிட்ட நோயாளிக்கு ஒரு சொந்த கோப்பு (Own Copy) என்ற முறை இருந்தது. நோயாளி சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்குச் சென்றால், அவர் அங்கே ஒரு புதிய கோப்பைத் திறக்க வேண்டும். ஆனால் இந்த புதிய முறையுடன், எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் ஒரு புதிய கோப்பு தேவையில்லை. ஏனெனில் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளியின் மருத்துவ பதிவுகளை ஒருங்கிணைந்த சுகாதார கோப்பு முறை மூலம் அணுக முடியும்.

இது குறித்து சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முஹம்மது அல் ஓவைஸ் மத்திய தேசிய கவுன்சிலிடம் (FNC) “தரப்படுத்தப்பட்ட நோயாளி கோப்புடன் அனைத்து மருத்துவமனைகளையும் இணைத்து, நோயாளிகள் பற்றிய தகவல்களை அணுக செயற்கை நுண்ணறிவு (AI) முறையை பயன்படுத்துகின்றனர். மேலும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான மைய தரவுத்தளத்தை (Central Database) உருவாக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுகாதார கோப்பு முறைமையின் பணிகள் நீண்ட காலமாக நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

அத்துடன் “ஒருங்கிணைந்த சுகாதார தரவுத்தளத்தை வழங்குவதும் (Integrated health database), சுகாதார சேவைகளின் தரத்தை உயர்த்துவதும், நோயாளிகளின் பராமரிப்பின் அளவை மேம்படுத்துவதும் மற்றும் மருத்துவ பிழைகளை குறைப்பதும் இதன் நோக்கமாகும்” என்று கூறினார்.

e-file system எவ்வாறு செயல்படும்?

  • ஒருங்கிணைந்த மின்னணு சுகாதார கோப்பு முறைமை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் மின்னணு முறையில் இணைக்கும்.
  • ஒரு நோயாளி அமீரகத்தின் ஒரு மருத்துவமனையை அணுகும்போது, ​​அனைத்து சிகிச்சை பதிவுகளையும் சுமந்து, அவரது பெயரில் ஒரு கோப்பு உருவாக்கப்படும்.
  • கணினியில் முழுமையாக விவரங்கள் சேகரிக்கப்பட்டவுடன், நோயாளி மற்றொரு மருத்துவமனைக்குச் செல்லும்போது, ​​அவர் அங்கே ஒரு புதிய கோப்பை உருவாக்கத் தேவையில்லை.
  • நோயாளியின் முந்தைய சிகிச்சை பதிவுகள் அனைத்தும் (வேறு மருத்துவமனையில் செய்யப்பட்டிருந்தாலும் பரவாயில்லை) புதிய மருத்துவமனைக்கு அணுகக்கூடியதாக இருக்கும், இதனால் சிகிச்சை எளிதாகுகிறது

எப்பொழுது நிறைவடையும்.?

  • இந்த ஆண்டின் தொடக்கத்தில், அரசு மருத்துவமனைகள் புதிய ஒருங்கிணைந்த மின்னணு சுகாதார கோப்பு முறையை செயல்படுத்தத் தொடங்கின.
  • இந்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து பொது மருத்துவமனைகளும் இந்த அமைப்பு மூலம் இணைக்கப்படும்
  • இந்த புதிய முறை மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை இணைக்கும் செயல்முறை 2021 இறுதிக்குள் 80 சதவீதம் நிறைவடையும்.
  • அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளையும் இணைக்கும் முழு திட்டமும் 2022 க்குள் நிறைவடையும்.
Loading...