தடுப்பூசி செலுத்தாத அமீரகவாசிகள் Al Hosn செயலியில் க்ரீன் பாஸைப் பெறும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மறுப்பு படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பயணம் செய்வதற்கான அனுமதிச்சீட்டைப் பெறலாம்.
பயணம் செய்வதற்கு முன் படிவத்தை நிரப்ப வேண்டியவர்கள்:
1. தடுப்பூசி செலுத்தாதவர்கள்.
2. ஒரே ஒரு டோஸ் செலுத்தியவர்கள்.
3. இரண்டாவது டோஸ் போட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தாதவர்கள்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அமீரகவாசிகள் மீதான பயணத் தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கிய பிறகு Al Hosn செயலியில் இந்த புதிய அம்சம் வந்துள்ளது.
ஏப்ரல் 16 முதல், தடுப்பூசி செலுத்தாத குடிமக்கள் அமீரகம் முழுவதும் அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்யலாம்.
நாட்டில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளதால் ஐக்கிய அரபு அமீரகம் பயணம் தொடர்பான கோவிட் பாதுகாப்பு விதிகளை தளர்த்தியுள்ளது.