35.4 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

ஈத் அல் பித்ர் : துபாயில் உணவுப் பொருட்களுக்கான விலையில் 60 சதவிகிதம் வரை தள்ளுபடி அறிவிப்பு!

hypermarket

ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு துபாயில் இருக்கும் ஹைப்பர் மார்கெட்களில் உணவுப் பொருட்களுக்கு 20 முதல் 60 சதவிகித தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருப்பதாக எமராத் அல் யோம் ( Emarat Al Youm) செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

எமிரேட்ஸ் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி ஹைப்பர் மார்க்கெட்டின் (Emirates Cooperative Society hypermarket) தலைவர் முகமது யூஸஃப் அல் காகா (Mohammed Yousuf Al Khaga) இதுகுறித்துப் பேசுகையில்,” எங்களது அனைத்து கிளை ஹைப்பர் மார்கெட்களிலும் 20 முதல் 60 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படும். ஈத் பண்டிகையை முன்னிட்டு அதிக தேவை இருக்கும் கோழி இறைச்சி, பழங்கள் மற்றும் இனிப்பு வகைகள், பாஸ்தா மற்றும் புட்டியில் அடைக்கப்பட்ட உணவுகளுக்கு இந்தத் தள்ளுபடி அளிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

mar-supermarkets
Image Credit : The National | picture used for illustrative purposes only

“முன்கூட்டிய இந்தத் தள்ளுபடி அறிவிப்பின் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கூட்ட நெரிசல் இல்லாமல் வாங்கிச் செல்ல ஏதுவாக இருக்கும். ஈத் நாட்களிலும் இந்தத் தள்ளுபடி தொடரும்” என காகா தெரிவித்தார்.

யூனியன் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி நிறுவனத்தின் (Union Cooperative Society) தலைமை நிர்வாக அதிகாரியான கலித் அல் ஃபலாசி (Khalid Al Falasi) பேசுகையில்,” நாளை முதல் பல சலுகைகள் மற்றும் 50 சதவிகித தள்ளுபடி ஆகியவை அறிவிக்கப்பட இருக்கின்றன. குறிப்பாக இறைச்சி, காய்கறிகள், பழங்கள் மற்றும் உலர் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்குத் தள்ளுபடி அளிக்கப்படும்” என்றார்.

 

மற்ற சில பதிவுகள்