UAE Tamil Web

கொரோனா விதிகளை மீறும் அபுதாபி பள்ளிகளுக்கு 2,50,000 திர்ஹம்ஸ் அபராதம்!

கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அபுதாபியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு முறையான பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் உடல் நலனில் கருத்தில் கொண்டு பள்ளிகள் பாதுகாப்பான முறையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அபுதாபியில் பள்ளிகளில் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு 10,000 முதல் 2.50 லட்சம் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி கல்வியறிவுத்துறை எச்சரித்துள்ளது. பள்ளிகளில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகளை கண்காணிக்க கல்வியறிவுத்துறை சார்பில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அவ்வப்போது அபுதாபியில் உள்ள பள்ளிகள் முன்னறிவிப்பின்றி சோதனையில் ஈடுபடுவர். 2 முறை எச்சரிக்கைக்குப் பின்னர் 3வது முறையும் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் தவறு செய்தால் சம்மந்தப்பட்ட பள்ளிக்கூடம் மூடப்படும் என்றும் மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

1 Share
Share via
Copy link