UAE Tamil Web

அபுதாபி: 7 நாட்களுக்கு ஒருமுறை PCR டெஸ்ட் கட்டாயம் – அரசு அறிவிப்பு..!

PCR Test

அபுதாபியில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் டிசம்பர் 26 ஆம் தேதிமுதல் (ஞாயிற்றுக்கிழமை) ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒருமுறை PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என அபுதாபி அரசு உதவித்துறை அறிவித்துள்ளது.

அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அபுதாபி அரசு உதவித்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தப் புதிய அறிவிப்பு மேலும் வலுப்படுத்தும் என அபுதாபி அரசு உதவித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

PCR Test
3 Shares
Share via
Copy link