துபாயில் உள்ள இந்திய தூதரகத்தின் வர்த்தக பிரிவில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலைக்கு உடனடியாக ஆட்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டத்தை பெற்றிருக்க வேண்டும். அத்துடன் வணிகத்துறை குறித்து நன்கு தெரிந்திருப்பதுடன், தகவல் தொழில்நுட்ப அறிவும் அவசியம். ஆங்கிலம் & இந்தியும் தெரிந்திருப்பது அவசியம்.
சம்பளம் : அடிப்படை சம்பளம் 7200 AED. இத்துடன் துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
வயது வரம்பு : விண்ணப்பிப்பவரின் வயது 1/02/2022 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதி: விண்ணப்பிப்பவர்களுக்கு துறை சார்ந்த முன் அனுபவம் அவசியம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21/01/2022
வேலை தேடும் உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த வேலைவாய்ப்பு குறித்த செய்தியை பகிருங்கள்.வாழ்த்துகள்.