UAE Tamil Web

விண்வெளியில் இருந்து மெர்சலாக காட்சியளித்த துபாய்!

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து துபாய் மீது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விண்வெளி ஆராய்ச்சி வீரர் வெளியிட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷேன் கிம்ப்ரோ எனும் விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அங்கிருந்து துபாயில் உள்ள புகழ்பெற்ற எமிரேட்ஸ் கோல்ஃப் க்ளப் மற்றும் உலகின் பிசியான ஏர்போர்ட்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்தை ஷேன் படம் பிடித்துள்ளார். பின்னர் அதனை பூமிக்கு அனுப்பி அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Image

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து துபாயை உளவு பார்த்தாக கிண்டலாக ஷேன் ட்வீட் செய்துள்ளார். பூமிக்கு திரும்பியதும் அவர் துபாயில் நடைபெற உள்ள EXPO 2020 கண்காட்சியை காண இருப்பதாக ஷேன் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3 Shares
Share via
Copy link